Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • தோட்ட சேவையாளர்களுக்கு 32% சம்பள உயர்வு; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

தோட்ட சேவையாளர்களுக்கு 32% சம்பள உயர்வு; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

Malaikuruvi December 3, 2025 1 minute read
தோட்ட சேவையாளர்களுக்கு 32% சம்பள உயர்வு; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும் இலங்கை தொழில் தருநர் சம்மேளனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட 2022 அக்டோபர் முதல் 2025 செப்டம்பர் வரை அமுலில் இருந்த கூட்டுப்ஓப்பந்தம் முடிவடைந்து புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் முடிவடைந்து 37 நாட்களுக்குள் புதிய கூட்டுப் ஓப்பந்தம் கடந்த06.11.2025 கொழும்பிலுள்ள சம்மேளனத்தின் தலைமை காரியாலயத்தில் தொழிற்சங்கத்திற்கும்
சம்மேளனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஓப்பந்தத்தில் சங்கத்தின் சார்பாக தலைவர் நிசாந்த வன்னியராச்சி ,பொதுச்செயலாளர் சதூர சமரசிங்க, நிதிச்செயலாளர்.எம்.சுதாகர்,பிரதித்தலைவர் ரோகண விஜயரட்ன.சம்மேளனத்தின் முக்கியஸ்தர்களும் கைசாத்திட்டனர்.

வரலாற்றில் முதற் தடவையாக உத்தியோகஸ்தர்களின் சம்பளம் 32 வீதம் அதிகரிக்கப்பட்டது இதுவேயாகும்.

இந்தக் கூட்டுப் ஓப்பந்தம் 2025 அக்டோபர் முதல் 2028 செப்டம்பர் வரை அமுலில் இருக்கும். இதில் உள்ளடக்கப்பட்டவையானது:

(1) 2025 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 20 வீதம் சம்பள அதிகரிப்பு, 2026 அக்டோபர் மாதம் அந்த வருடத்திற்குரிய (Anual increment) சேர்த்து 10 வீதம் சம்பள அதிகரிப்பு மொத்தம் 32 வீதம் ஆகும்

(2)வருடாந்த சம்பள அதிகரிப்பு Anual increment) 5% முதல் 13 வீதம் வரை அதிகரிப்பு.

(3)மரணதராக் கொடுப்பனவு 250,000/= அதிகரிப்பு.

(4) வீட்டு வாடகை House rent 10வீதம் அதிகரிப்பு.

(5 ) 2025 அக்டோபர் முதலாம் திகதி வரை சேவையில் ஈடுபட்டிருந்த சகல உத்தியோகஸ்தர்களுக்கும் மேற்படி ஓப்பந்தத்திலுள்ள எல்லா கிடைக்கும்.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம். உத்தியோகஸ்தர்களின்
இந்தக் கூட்டுப் ஓப்பந்தம் சம்பந்தமாக ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் பேரம் பேசி ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது சம்பந்தமாக 12 மாவட்டத்திலுள்ள மாவட்டத்தலைவர்களை (,Branch Chairman)அழைத்து சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் கூட்டம் வைத்து அவர்களின் ஆலோசனைககளையும் பெற்று அவர்களின் அனுமதியுடன்தான் ஓப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இச் சங்கம் வருடம் தவறாமல் மேதின கூட்டங்களை நடத்தி வருகின்றது. ஜனநாயக ரீதியாக அரசியல் கலப்பற்ற சுதந்திரமாக 105 , வருடங்களாக பழமைவாய்ந்த தொழிற்சங்கமாகும்.

இந்த கூட்டுப் ஓப்பந்தத்தைப்பற்றி தோட்ட உத்தியோகஸ்தர்கள் சிலர் தமது கருத்துக்களை கூறியவை கீழ் வருமாறு.

எனது பெயர் பி.யோகலெட்சுமி எனக்கு 44 வயது நான் குடும்ப சேமநல உத்தியோகத்தராக அட்டன் பகுதி தோட்டம் ஓன்றில் கடமை புரிகிறேன் முதலாவதாக எமது தோட்ட சேவையாளர் சங்கத்திற்கு பெரியதொரு நன்றியை கூறிக்கொள்கிறேன் காரணம் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு போராட்டமின்றி பேச்சுவார்த்தை மூலம் மாபெரும் வெற்றி ஈட்டியது இது அனைத்து தோட்ட சேவையாளர்களுக்கும் சந்தோசமான எதிர்ப்பார்ப்பாகும்

இது 10ஆவது கூட்டுப் ஓப்பந்தமாகும் இதில் சம்பளம் மட்டுமல்ல வேறு பல நன்மைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. முக்கிய விடயம் என்னவென்றால் 37 நாட்களுக்குள் புதிய கூட்டுப்ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுதான் புதுமையான விடயமாகும் என்றார்.

அடுத்து கருத்து தெரிவித்த கண்டி பகுதியைச் சேர்ந்த தோட்டமொன்றில் வெளிக்கள உத்தியோகஸ்தராக கடமையாற்றும் கே.பாரதிராஜா:

தொழிற்சங்கம் என்றால் அங்கத்தினர்களுக்கு சேவை செய்யவேண்டும், அந்த சேவையைத் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் சரியாக செய்துள்ளது. இந்த நாட்டில் தொழில் செய்பவர்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு போராட்டம் செய்வதை காணக்கூடியதாக இருக்கும் சூழ்நிலையில் எமது சங்கம் எந்த விதமான போராட்டமின்றி அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி 32% சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த தொழிற்சங்கத்திற்கு உத்தியோகஸ்தர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்து எங்களுக்கு சேவை செய்வதற்கு இறைவன் அருள் புரியவேண்டுமென்று மேலும் தெரிவித்தார்.

டி. வசந்தகுமார்-நாவலப்பிட்டி

Post navigation

Previous: வட்டி அற்ற மாணவர் கடன் திட்டம்: விண்ணப்ப காலம் நீடிப்பு
Next: அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |