தொலஸ்பாகை ராக்ஸாவ தோட்ட நிலவரம் குறித்து தவறான தகவல் தோட்டத்தில் உள்ள சிலரால் பரப்பப்படுவதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராக்ஸாவ தோட்டத்தில் மண்சரிவோ எந்தப் பாதிப்போ ஏற்படாத போதிலும் தோட்ட மக்களைப் பாதுகாப்பாதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆனால், அது குறித்து பக்கசர் சார்பான செய்திகள் பரப்பப்பட்டிருப்பதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தொலஸ்பாகை ராக்ஸாவ மக்களுக்கு நிவாரண உதவிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்தத் தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க அரச அதிகார்கள் ஊடாகவும் தோட்ட நிர்வாகத்தின் மூலமதவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ராக்ஸாவ தோட்ட நிர்வாகம் மலைக்குருவி ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
நிர்வாகத்தின் முழுமையான அறிக்கை:
நாவலபிட்டி தொலஸ்பாக பகுதியில் அமைந்துள்ள ராக்சாவ தோட்ட நிறுவகத்தைக் குறித்து; இத்தோட்டத்தில் பணி புரியாத வெளியில் இருந்து வந்த சிலரின் உண்மைக்குப் புறம்பான செய்திகளாகும் முன்பு பரப்பப்பட்ட போட்டோக்களும் வீடியோப் பிரதிகளும் புனையப்பட்டதாகவும் சம்பவங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே காட்டுவதாகவும் உள்ளது கடந்த 27 ம் திகதி ஏற்பட்ட பேரிடரால் இத்தோட்டத்தில் எவ்விதமான மண்சரிவோ அபாயமோ நடக்கவில்லை ஆனாலும் தோட்ட நிருவாகம் அத்தினங்களில் நடைபெற்ற சீரற்ற காலநிலையால் அங்கிருக்கும் 11 குடும்பங்களின் நலன் கருதி பாதுகாப்பிக்காக தேயிலைத்தொழிற்;சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்திற்கு அவர்களை வரவழைத்து தங்கவைக்கப்பட்டனர் அன்றிலிருந்து அவர்களுக்கு போதிய அளவு உலர் உணவுப் பொருட்கள், வீட்டுத்தளபாடங்கள், துணிமணிகள், பாடசாலை உபகரணங்கள் என்பன அளவுக்கதிகமாகவே கிடைக்கப்பெற்றுள்ளன அதனை தினம்தோறும் அவர்கள் சேதமாகியதாகக் குறிப்பிடும் வீடுகளுக்கு கொண்டுபோய் வைத்துள்ளனர் எதிர் வரும் 5-6 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் உட்பட தேவையான பொருட்கள் அவர்களுக்கு நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன அதற்கான ஆதாரங்களாக அங்கிருக்கும் ஊஊவுஏ பதிவு வீடியோக்களும் புகைப்படங்களும் உள்ளன அத்துடன் அத்தோட்ட நிருவாகத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட புத்தகங்களிலும் பதிவாகியுள்ளன தோட்ட நிறுவாகத்திட்கு எதிரான சில வீடியோக்களில் வீட்டு வசதிகளைப்பற்றியும் பொய்யானதும,; உண்மைக்குப் புறம்பான காட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் பழைய வீடுகள் ஏற்கனவே கைவிடப்பட்ட வீடுகளாகும்,
அதற்கான அவ்வீடியோக்களில் பேட்டி கொடுப்பவர்களுக்கு ஏற்கனவே சிறந்த வீட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன இதை யாரும் நேரடியாக வந்து பார்ப்பின் தோட்ட நிருவாகம் உறுதி செய்யும் சிறந்த வீட்டு வசதிகள் இருக்கையில் இத்தனியார் தோட்டத்தில் அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்வதற்கான காணியை பெரும் நோக்கத்தில் இத்தோட்டத்தில் தொடர்ந்து வேலை செய்ப்பவர்களுக்கும் வேலை புறிய விடாது தடுத்து நிறுத்திக்கொண்டு இம்முகாமில் தங்கியுள்ளதுடன் வேலை செய்யாத குறிப்பிட்ட சிலர் பிந்திய பேரிடத்தைக் குறிப்பிட்டு காணிகளைப்பெற முயற்சிப்பதுடன் நிறுவகத்துக்கெதிரான பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்புகின்றனர.; இதனை மறுத்து உண்மையை நிரூபிப்பதட்கான ஊஊவுஏ வீடியோக்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் தாராளமாகவே உள்ளன.
39 குடும்பம் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தாலும் 29 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அதில் 14பேர் மாத்திரம்தான் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.






