இயன் மருத்துவப் பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில், புதன்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள், நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) மாலை 3.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் புத்திகா தர்மதாச, அவ்விருவரையும் 48 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
