Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • இந்தியா
  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி

Malaikuruvi December 4, 2025 1 minute read
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி

இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறுத்தப்ப்ட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலுக்கு அனுமதி வழங்கி மதுரை மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனால், நேற்று மாலை கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு – திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் நேற்று (டிசம்பர் 3 ) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார்

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது” என வாதம் முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறி வழக்கை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தீர்ப்பு கிடைத்தவுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post navigation

Previous: Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 19,000 இலங்கையர்கள் பங்களிப்பு
Next: தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |