தலவாக்கலை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று (29) நண்பகல் புதிய கட்டடம் ஒன்றினைக் கோரி தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதுள்ள பிரதேச செயலக கட்டடத்தில் இடவசதி குறைவாக இருப்பதால், இங்கு சேவைகளைப் பெற வருபவர்களும், அங்கு பணிபுரிபவர்களும் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இங்கு ஒரே ஒரு கட்டடம் மாத்திரம் காணப்படுவதாகவும் அதில் மேல் மாடியில் மட்டுமே அவலுவலக செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் நாளாந்தம் ஏராளமான மக்கள் இங்கு சேவைகளைப் பெற வருவதால், அதிகளவான மக்கள் சிறிய மேல் மாடிக்கு வரும்போது, தங்களால் சரியாக சுவாசிக்கக்கூட முடியவில்லை யாதலால் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
