தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி இன்று மனத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டிக்வா புயலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்தது மாத்திரம் அல்லாது பலரும் இன்று வரை காணாமல் போய் உள்ளனர்.
அத்தோடு பலரது வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் சொத்துகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றும், மண் சரிவில் புதைந்தும் உள்ளன.
மேலும் பல சிறார்கள் மரணித்து உள்ளதோடு பெற்றோர்களையும் இழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய அதிபர் நல்லமுத்து விஜயகுமாரன் தலைமையில் பாடசாலையில் அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
பாடசாலை ஆரம்பித்த முதல் நாளில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்களைத் தூவி பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சில நிமிடங்கள் அனுதாப அஞ்சலியை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கௌசல்யா





