தன் பிள்ளையின் விடுகை பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மனித உரிமை ஆணைக்குழு வரை சென்ற தாய் ஒருவர் பற்றிய தகவல் நுவரெலியா பகுதியில் வெளியாகியுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள கோட்டம் இரண்டில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற தனது பிள்ளையை வேறொரு பாடசாலைக்கு மாற்றுவதற்காக பெற்றோர் விருப்பம் தெரிவித்த போதிலும் அந்த பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
அந்தப் பிள்ளையுடன் படித்த ஏனைய ஓரிரு மாணவர்களுக்கு விடுகை பத்திரம் கொடுத்த போதிலும் அந்த அதிபர் இந்தப் பிள்ளைக்கு மாத்திரம் பல காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாய் இந்தப் பிரச்சனை தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக முறைப்பாடுகளைக் கொண்டு சென்ற போதிலும், அவருக்கான தீர்வினை அதிகாரிகள் வழங்கவில்லை.
இது மாத்திரம் அல்லாது பாடசாலையின் அதிபர் மீது வேறு சில சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டபோதிலும் கல்வி அதிகாரிகள் அல்சியப்போக்குடன் நடந்துகொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தனது பிள்ளைக்குத் தீர்வு கிடைக்காத அந்தத் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கௌசல்யா
