அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடி வந்தார்கள் என்ற சந்தேகத்தில் நால்வர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 6 கிராம் ஹெரோயின், 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கினியாகல, சம்மாந்துறை, மத்திய முகாம் மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் அம்பாறை நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக அம்பாறை மாவட்டத்தில் தங்க ஆபரணத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தக் கைதுகள் நடைபெற்றன.
