தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியர் உயிரிழந்தனர்.
இன்று (18) மாலை 6.15 இற்கு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
9 மி.மீ ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
