பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம். காதலைச் சேர்த்துவைத்த அருட்தந்தை வெலன்டைன் நினைவாக இந்தத் தினத்தை வெலன்டைன் தினம் என்றும் அழைப்பார்கள்.
வெளி நாடுகளில் எல்லாம் பிரிந்து வாழும் சொந்தங்களையும், பந்தங்களையும் நினைவு கூரவும் தேடி அல்லது ஓடிச் சென்று பார்க்கவும் 365 நாள்களையும் ஒவ்வொரு விஷயத்துக்காக ஒதுக்கினார்கள்.
ஆனால், வர்த்தக யுக்தியால், மெல்ல இந்த கலாசாரம் அனைவரையும் சூழ்ந்து கொண்டுள்ளது. சரி கொண்டாட்டம்தானே.. அதனால் என்ன என்று மக்களும் அதற்குப் பழகிவிட்டார்கள்.
அதில் ஒன்றுதான் இந்த காதலர் தினம். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்ற நிலையில், காதலர் தினத்தை மட்டும் புறக்கணித்து விட முடியுமா என்ன?
மனத்துக்குள் காதலித்துக் கொண்டு இதயம் முரளி போல சொல்லாமல் இருப்பவர்களுக்கும், காதலிக்கிறார் என்று தெரியும், இதுவரை சொல்லவில்லை என்று ஆதங்கத்தில் இருப்போருக்கும், லவ் பிரபோஸல் முதல் லவ் பிரேக் வரை பல விஷயத்துக்கும் பிப்ரவரி 14ஆம் திகதி மிகக் கச்சிதமான நாளாக அமைந்துவிட்டது.
சரி இந்த பிப்ரவரி 14ஆம் திகதியைக்காதலர்கள் எப்படி கொண்டாடப் போகிறார்கள் என்று ஏற்கனவே திட்டமிட்டு இன்று செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், காதலர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமல்ல, இது ஒரு வாரக் கொண்டாட்டமாக உள்ளது உலக நாடுகளில்.
அதாவது, இந்த கொண்டாட்டம் பிப்ரவரி 7ஆம் திகதி தொடங்கி பிப்ரவரி 14ஆம் திகதி வரை நீள்கிறது.
அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள்.
எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், பிப்ரவரி 7ஆம் திகதி தனது இணையருக்கு இந்த நாளில் ரோஜா மலரைப் பரிசளிக்கிறார்கள்.
பெப்ரவரி ஏழழாந்திகதி ஆரம்பமாகும் ரோஜாக்கள் தினம்,எட்டாந்திகதி காதலைச் சொல்லும் தினம், ஒன்பதாந்திகதி சொக்லேட் தினம், 10 ஆம் திகதி பெண்களுக்குக் கரடி பொம்மை வழங்கும் டெடி தினம், 11 வாக்குறுதி தினம், 12 முத்த தினம், 13 அணைத்தல் தினம், 14 காதலர் தினம்.
இப்படி உலகில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாகக் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதல் நகரமான பாரிஸைத் தலைநகரமாகக் கொண்ட நாடு பிரான்ஸ். பாரிஸ் நகரத்திற்கு ஆண்டுதோறும் 3 கோடிக்கும் அதிகமான காதல் ஜோடிகள் சுற்றுலா வந்துசெல்கின்றனர்.
காதலர் தினத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வாழ்த்து அட்டையானது, 1415 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் சிறைச்சாலையிலிருந்து தனது மனைவிக்கு காதல் கடிதங்களை அனுப்பியபோதுதான் முதல்முறையாக தோன்றியது என நம்பப்படுகிறது.
பிரான்ஸ் முழுவதும் பிப்ரவரி 12 முதல் 14 வரை காதலர் தினக் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. அந்தக் காலகட்டத்தில் வீடுகள், மரங்களில் காதலர் தின அட்டையைக் கொண்டு அலங்கரிப்பதை வழக்கமாகக கொண்டுள்ளனர். இந்த நடைமுறை உலகின் மிக பழமையான பாரம்பரியமாகத் திகழ்கிறது. காதல் நகரமான பாரிஸைத் தலைநகரமாகக் கொண்ட நாடு பிரான்ஸ். பாரிஸ் நகரத்திற்கு ஆண்டுதோறும் 3 கோடிக்கும் அதிகமான காதல் ஜோடிகள் சுற்றுலா வந்துசெல்கின்றனர்.
காதலர் தினத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வாழ்த்து அட்டையானது, 1415 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சிறைச்சாலையிலிருந்து தனது மனைவிக்கு காதல் கடிதங்களை அனுப்பியபோதுதான் முதல்முறையாக தோன்றியது என நம்பப்படுகிறது.
பிரான்ஸ் முழுவதும் பிப்ரவரி 12 முதல் 14 வரை காதலர் தினக் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. அந்த காலகட்டத்தில் வீடுகள் மற்றும் மரங்களில் காதலர் தின அட்டையைக் கொண்டு அலகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நடைமுறை உலகின் மிக பழமையான பாரம்பரியமாக திகழ்கிறது.
பல நாடுகளில் காதலர் தினத்தன்று பலர் பொய் கூறி விடுப்பு எடுக்கிறார்கள். ஆனால் டென்மார்க்கைப் பொறுத்தவரை அதற்கு அவசியமில்லை. ஏனெனில் அன்றைய தினம் நாடு முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நாட்டில் காதலர்கள் காதல் வாழ்த்து அட்டையில் வெள்ளைப் பூக்களை வைத்து, நகைச்சுவைக் கவிதைகள் எழுதிக் கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
மற்ற நாடுகளுக்கு சற்றே வேறுபட்டு உள்ளது தென் கொரியா. அங்குக் காதலர் தினமானது பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14 ஆம் திகதி இளம் பெண்கள் தங்களது காதலருக்குப் பரிசுகளை வழங்குவர். அந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ளும் ஆண்கள், மார்ச் 14 ஆம் திகதி வெள்ளை தினத்தன்று பெண்களுக்குப் பரிசு வழங்குவதை பாரம்பரியமாகக் கொண்டுள்ளனர்.
எது எப்படியோ காதல் என்பதெல்லாம் உண்மையில்லை. அது வெறும் ஈர்ப்பு மட்டுமே என்கிறார் எழுத்தாளர் சுஜாதா. உனக்கு நான் எனக்கு நீ என்று சத்தியம் செய்வதெல்லாம் சத்தியம் இல்லை என்கிறார் அவர்.
இந்த உலகில் எஙகிருந்தாலும் என்றோ ஒருநாள் அந்த உண்மையான ஈர்ப்பு எப்படியும் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்கள் மகான்கள்.
