சென்கிளயர் அருவிக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார் அருவிக்கு அருகில் நேற்று (13) மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
பலத்த காயமடைந்த ஒரு சாரதி 1990 சுவசரிய அம்பியுலன்ஸ் மூலம் கொட்டகலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

