சுப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த இன்று 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து நன்றி தெரிவித்த அனைத்து ரசிகர்கள் மற்றும் கடந்த 50 வருடமாக தங்களுடன் பயணிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் லதா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அவர் நடித்து சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அங்கேயே தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை ஜெயிலர் 2 திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
