சீரற்ற காலநிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பகுதியளவில் 335 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், அவிசாவளை – மடோல பகுதியில், பெய்த கனமழைக்கு மத்தியில், பயிற்சி வகுப்புகளில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, வடிகானில் விழுந்து சுமார் 80 மீட்டர் தூரத்துற்கு நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது மாணவி நேற்று உயிரிழந்தார்.
அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
நேற்றுக் காலை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைப்பொழிவு காலி – சிறிகந்துர தோட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 241 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.
