சிவனொளிபாத மலையில் இன்று சிரமதானம் நடைபெறுகிறதுஃ
நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் ஏற்பாட்டில் சிவனொளிபாதமலையில் சிறமாதானம் இன்று டிசம்பர் இரண்டாந்திகதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் 2000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஹட்டன் வலயத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருடன் அந்ததந்த பொலிஸ் நிலைய பொலிசார், லக்சபான மவுஸ்சாகலை முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்கள் அதிகாரிகள், ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடிப் படையினர், நோட்டன் மஸ்கெலியா ,கென்யோன், லக்சபான, பகுதியில் உள்ள இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வனத் துறை அதிகாரிகள், பிரதேச சபை ஊழியர்கள், நுவரெலியா, நோர்வூட், அம்பகமு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இந்தச் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு பணியாற்ற உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
