சிவனேஸ்வரா மாணவி ஜனனி புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கஷ்டப் பிரதேச பாடசாலையான வத்தேகமை கல்வி வலயத்திற்குட்பட்ட பன்விலை மடுல்கலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி, 140 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.
இவர் சோலங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்செல்வன் – மகேஸ்வரி தம்பதியின் புதல்வியாவார்.
பாடசாலை அதிபர் எம். நவநீதன்,வகுப்பாசிரியர் என். சுரேஷ்குமார் ஆகியோரொடு மாணவி ஜனனி.
