எதிர்வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்தக் களஞ்சிய முனையம் எதிர்வரும் சனிக்கிழமை 17ஆம் திகதி மூடப்படுவதாகவும் எனவே, வார இறுதி, திங்கட்கிழமைகளுக்கான எரிபொருளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள விநியோகஸ்தர்கள், அவ்வாறு முன்கூட்டியே எரிபொருளைப் பெற்று விநியோகிப்பதற்குத் தம்மிடம் அந்தளவு பணம் இல்லையென்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், வார இறுதியிலும் திங்கட்கிழமையும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அந்தச் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்குச் சனிக்கிழமை மேலதிகக் கொடுப்பனவு (ஓவர் டைம்) வழங்குவதைத் தவிர்ப்பதற்காக சனிக்கிழமைகளிலும் மொத்தக் களஞ்சிய முனையத்தை மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.
