கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் பூக்குடு கண்ணாவின் சகா எனத் தெரயவந்துள்ளது.
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றச் செயல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்கின்ற ‘பூக்குடு கண்ணா’ என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இவர் உயிரிழந்தார்.
கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 43 வயதுடைய நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
