கொட்டகலை லொக்கில் மர ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டகலை லொக்கில் தோட்டப் பகுதியில் புதிய மர ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மர ஆலை அமைக்கப்படவுள்ள கட்டுமானப் பகுதியில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள், பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அந்தப் பகுதியில் வழிபாட்டுத் தலங்கள், தேயிலை கொழுந்து கொள்வனவு நிலையம்,தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி ஆகியவை அமைந்துள்ளன. மர ஆலை அமைக்கப்பட்டால் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படும்.சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
