கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவம்பர் 16 ஆம் திகதி அன்று கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்கு உள்ளான ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நிர்வாகம் அம்புலன்ஸ் வழங்காததே இதற்குக் காரணம்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையான வசதிகளையும் மரியாதையையும் வழங்குவதில்லை என்றும், இதன் காரணமாக தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் நிலவுவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், தோட்ட நிர்வாகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோருகின்றனர்.
இது குறித்து கேட்டபோது, நவம்பர் 24 ஆம் தேதி ஹட்டன் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் இந்தப் பிரச்சினை குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்றும் தோட்ட நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எந்தவொரு பிரச்சினைக்கும் உரிய தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தத்தைக் கைவிடப் போவதில்லை என்று தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

