கறுப்பு ஜூலை கற்காத பாடங்கள் நூல் அறிமுக விழாவும் கலந்ர்துரையாடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி அட்டனில் நடைபெறுகிறது.
அட்டன் டிக்கோயா நகர சபை பிரதான மண்டபத்தில் காலை 10 மணிக்கு விழா நடைபெறுகிறது.
விழாவுக்கு சட்டத்தரணி நேரு கருணாகரன் தலைமை தாங்குகிறார்.
இந்நூல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 52 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. 296 பக்கங்களைக் கொண்டது. வடலிப் பதிப்பகம் மிகச் சிறப்பாக பதிப்பித்து யூலை 2025 இல் வெளியிட்டிருக்கிறது.
இதற்கு வீ. தனபாலசிங்கம் அணிந்துரை எழுதியுள்ளார். இந்த 52 கட்டுரைகளும் தமிழ் மிரர் இணைய பத்திரிகையில் 2023 யூலை தொடங்கி 52 வாரங்களாக தொடராக வெளிவந்தவை.
கறுப்பு யூலை என இலங்கை வரலாற்றில் அடையாள படுத்தப்படும் தமிழர்களுக்கு எதிராகப் பேரினவாத அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
ஆர்வமுள்ள அனைவரும் நிகழ்வில் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு செம்புலம் மக்கள் கூடம் அன்புடன் அழைக்கிறது.
