சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய கண்காட்சியாகக் கருதப்படும் இந் நிகழ்வில் அலங்கார மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியானது நவம்பர் 21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை இலவசமாகப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக, உலக மீனவர் தின நினைவு முத்திரை வெளியிடப்பட்டதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
