Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார்

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார்

Malaikuruvi December 17, 2025 1 minute read
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார்

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக யாழில் நடைபெற்ற போராட்டத்தில், எதிர்காலத்தில் 5000பேரை திரட்டி போராட்டம் நடாத்தி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை இல்லாது செய்வோம் என்றும், அமெரிக்கா மற்றும் சீன தூதரகத்தை யாழில் அமைப்போம் என்றும் மீனவர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

அந்த ஒரு மீனவன் தெரிவித்த கருத்தானது இன்று ஒட்டுமொத்தமான மீனவர்களுக்கு மாத்திரமல்ல, குறிப்பாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இராஜதந்திர நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. 

இது பாரிய வேதனைக்குரிய விடயம் மாத்திரம் அல்ல, அவலங்களை சுமந்திருக்கின்ற எங்களுடைய தமிழ் மக்களை மீண்டும் ஒரு அவலத்திற்குள் தள்ள கூடிய செயற்படாகத்தான் அமைந்திருக்கின்றது.

இந்தக் கருத்துக்கு பின்னால் ஆளும் தரப்பு இருக்கின்றது என்ற விடயம் தெட்டத்தெளிவாக தெரிகின்றது. போராட்டத்தை நடத்திய மீனவர்கள் நேற்றையதினம்(15) ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி இருந்தனர். அதில் ஒரு விடயத்தை வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர்.

தற்போது இருக்கின்ற கடற்தொழில் அமைச்சர் தான் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுங்கள் என வற்புறுத்துவதாக மீனவர்கள் நேற்றைய ஊடக சந்திப்பின்போது தெரிவித்தனர். இந்த விடயத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது இனத்தை மீண்டும் இராஜதந்திர ரீதியில் நெருக்கடிகளுக்கு உள்ளாக்க கூடாது.

ஜனாதிபதி ஒரு நல்ல தீர்வு தருவார் என மக்கள் நம்புகின்றார்கள். அவர்கள் இவ்வாறு நம்பிக்கொண்டு இருக்கையில் ஆளும் தரப்பின் அமைச்சர ஒருவர் இவ்வாறு மக்களை வழிநடத்துவது என்பது என்னை பொறுத்தவரையில் ஒரு பாரிய தவறாகும். அதுமட்டுமல்ல இது ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரச்சினை. 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாண மீனவர்கள் தொழில் முதல்களை இழப்பதுடன் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்படுகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு அவலத்திற்கு உள்ளாகின்றனர். இந்த இழுவைமடி மீன்பிடி முறையானது இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட இனத்தை தூண்டி மீண்டும் அவர்களை பிரச்சினைகளுக்குள் தள்ளி விடுவது ஆபத்தான விடயமாகும்.

ஏனெனில் பேரிடர் ஒன்று ஏற்பட்டபோது எமக்கு உடனடியாக கை கொடுத்தது பாரத தேசம். கடந்த காலத்தில் கோட்டாபயவின் ஆட்சியில் எமது நாடு வீழ்ச்சி அடைந்தபோது கூட அதை மீட்பதற்கு பாரத தேசமே உதவி புரிந்தது. எதிர்காலத்திலும் எமது தேசத்தை காட்டியெழுப்ப இந்திய தேசம் கரம் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post navigation

Previous: தொழினுட்ப கோளாறுக்கு உள்ளான துருக்கி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்!
Next: அவுஸ்திரேலிய கடற்கரை துப்பாக்கிதாரி ஓர் இந்தியர்

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |