Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய ஆயுதத் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு வரும் உலகில் இது எவ்வளவு அழிவுகரமானது என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். என்று கூறிய ஜனாதிபதி,

இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்.” என்றார்.

இந்த போர்ச் சூழலினால் இலங்கையின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும், தனிமைப்பட்ட ரீதியில் அதிலிருந்து எம்மால் மீள முடியாது எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

ஒரு நாடாக இதனை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அமைதியான உலகிற்காக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பின் ஊடாக மாத்திரமே அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்குத் தடைகள் ஏற்படக்கூடும் எனவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பெரும் சிக்கல் உருவாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறை, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கும் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்தப் போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக இவ்வாறானதொரு சூழலில் மக்கள் அச்சமடைவது இயல்பான நிலை எனவும் குறிப்பிட்டார்.

வெறும் சொற்களாலும் தரவுகளாலும் மாத்திரம் சமூகத்தை ஸ்திரப்படுத்த முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நடைமுறையில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்துவதன் மூலமே அதனைப் புரியவைக்க முடியும் என்றும் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இவ்வாறான பல சவால்களை மிக வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமையால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் முன்னரை விட வேறுபட்டவை எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய போர்ச் சூழலை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ச்சியாக இந்நிலைமையை அவதானித்து வருவதாகவும், மத்திய வங்கி தற்போதைய நிலைமை குறித்து மீளாய்வு செய்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அறிக்கையை இன்று அல்லது நாளை மாலைக்குள் வழங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நிதி அமைச்சும் அறிக்கையொன்றைத் தயாரித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் உள்நாட்டிலுள்ள மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவது குறித்த வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Post navigation

Previous: பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Related Stories

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026

Trending News

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 1

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் 2

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 3

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 4

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 5

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்
  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |