ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் இடையே இன்று (30) மதியம் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பு குறித்து தனது X தளத்தில் ஒரு பதிவையிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல் நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளார்.
