இன்றைய இளையோர் அலைபேசியும் கையுமாகப் பொழுதைக் கழிக்கும்போது இந்தப் பெரியவர் – 79 வயது – கண்டி, பன்விலை நகரில் அதிர்ஷ்டலாபச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்.
“என்னய்யா இந்த வயதில்?” என்றால், “எதக்குங்க அடுத்தவருக்குச் சிரமம் கொடுக்கணும்! ஆண்டவன் என்னை இன்னும் உழைத்துச் சாப்பிடும் தெம்புடன் வைச்சிருக்கான்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் திரு. ஆசாரி கணேசன்.
பிறந்தது பன்விலை, அப்பல்லபெத்த 1947 பெப்ரவரி 04. சுதந்திரம் கிடைப்பதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்னர் பிறந்தவர்.
“இந்தச் சீட்டில் பரிசு இருக்கிறதா, என்று பாருங்க” என்று யாராவது சொன்னால், கண்ணாடிகூட இல்லாமல் துல்லியமாக இலக்கங்களைப் பார்த்துச் சொல்கிறார்! வாழ்த்தகள் ஐயா!
பன்விலை ம. நவநீதன்


