ஈபிஎப், ஈரிஎப் பெறுவதில் உதவும் நடமாடும் சேவை ஹற்றனில் தேசிய சமாதானப் பேரவையின் மூலம் பெருந் தோட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஹட்டன் நகரில் அமைந்துள்ள சீடா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் வைத்திய கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையிஊல் நடமாடும் சேவையொன்று நடைபெறுகிது.
இதற்கு அமைய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி பெற முடியாது உள்ள அனைத்து மக்களும் நடைபெற உள்ள இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்
நிகழ்வில் தொழில் ஆணையாளர், ஊழியர் நம்பிக்கை நிதிய காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்
