இரத்தினபுரி பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள சிங்கர் ஹோம் காட்சியறை திடிரென தீப்பிடித்து எரிந்ததனால் அக்காட்சியறை பலத்த சேததத்திற்குள்ளானது.
இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இச்சம்பவத்தில் தொலைக் காட்சி பெட்டிகள். குளிர் சாதனப் பெட்டிகள், உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருள்கள் சேதமடைந்த போதிலும்.உயிர்ச் சேதங்கள் எதுவும் எற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீவிபத்து க்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை. இது குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
எஸ். ஆர். இரவீந்திரன்
