புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகலை,நயபனை ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் வீதியில் பாரிய நில வெடிப்பொன்று ஏற்பட்டு பாதை பிளவடைந்திதிருக்கின்றது.
இதன் காரணமாக நயபனை,தொரகலை பிரதேசங்களுக்கு செல்லும் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் இவ்வழியே போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு கனரக வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள்,முச்சக்கர வண்டிகள் மாத்திரமே இந்த ஆபத்தான வீதியில் பயணிக்கின்றன.சுமார் இரண்டடிக்கு அதிகமான நீளத்தைக் கொண்ட இவ் வெடிப்பு காரணமாக பொது மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இரட்டைப்பாதை நகருக்கு அருகிலுள்ள இவ்வீதி செல்லும் வழியில் அமைந்துள்ள குடியிருப்புகள் சிலவற்றிலிருந்து பொது மக்களை வெளியேறுமாறும் கேட்கப்பட்டிருக்கின்றது.நிவ் பீகொக்,ஓல்ட் பீகொக்,நயபனை,மேமலை,சப்ளி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொது மக்கள் இவ்வீதியை தினமும் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வகுகபிடிய வழியாக தொரகலை,நயபனை பிரதேசங்களுக்கான மாற்று வழி பஸ் போக்குவரத்து சேவை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம.நவநீதன்
