தித்வா புயலின் அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் அமைக்கும் பணி உடபளாத்த பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜெயரட்ண தலைமையில் அவரது மேற்பார்வையின் கீழ் புசல்லாவை இரட்டைப்பாதை கிராம சேவகர் பிரிவில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியில் இவ்வாறு இரு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதவி பிரதேச செயலாளர் எம. ஹேரத், பிரதேச கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
முற்றாக வீடுகளை இழந்த வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களுக்கு இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளதாகவும் நெதர்லேண்ட் foudation நிதி உதவியின் மூலம் வீடுகள் அமைக்கப்படுவதாகவும் சமுர்த்தி உத்தியோகத்தர் மாரிமுத்து யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



