இன்று சில மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுஃ
சில மாவட்டங்களில் இன்று (23) மனித உடலுக்கு உணரும் அளவுக்கு வெப்பம் நிலவும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொனறாகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பமான காலநிலை நிலவும்.
அதற்கமைய அந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் 39-45 செல்சியஸ் வரை வெப்பம் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, பொதுக்கள் இதுபற்றிக் கவனம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
