இந்தியாவின் நகரும் பெய்லி பாலத்தின் நாலாம் கட்டத் தொகுதி இன்று இந்திய விமானப் படையின் சி-17 விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்தது.
நாலம் கட்டமாக 63 மெட்ரிக் தொன் பாலத்தின் பகுதிகள் கொண்டுவரப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சாகர் பந்து நடவடிக்கை கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 248 மெட்ரிக் தொன் பாலம் கொணடுவரப்பட்டுள்ளது.
இந்தியா இதுவரை இலங்கைக்கு ஆயிரத்து 68 மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் சாகர் பந்து நடவடிக்கைக்கு உறுதுணையாக தமிழ் நாடு அரசும் ஆயிரம் மெட்ரிக் தொன் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.
இது தவிர, இலங்கை விமானப் டையின் நிவாணப் பணிகளுக்கு உதவும் பொரும்டு மற்றொரு இந்திய ஹெலிகொப்டர் இன்று இலங்கை வந்தது.
இந்திய இராணுவத்தின் மருத்துவமனையொன்று மஹியங்கனைப் பகுதியில் இயங்கி வருகிறது. இதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கபபட்டுள்ளது.
இந்தியாவின் சாகர் பந்து நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



