மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பணம் பரிமாற்றும் முறை,, சேமிப்பு முறை ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விசேட தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) நடைபெற்றது.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபை அறநெறி பாடசாலையின் பொறுப்பாளர் தியாகராஜா சத்தியசீலனின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அறங்காவல் சபை அறநெறிப் பாடசாலையில் பயிலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா ரூபாய் 500 கிராமிய வங்கி மூலமாக வைப்பிலிடப்பட்டு வங்கிச் சேமிப்பு புத்தகங்கள் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டன.
கிராமிய வங்கியின் மாத்தளை கிளை உத்தியோகஸ்தர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அறங்காவலர் சபை அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாளர்
தியாகராஜா சத்தியசீலன், வங்கி வைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக மாத்தளை வாழ் இந்துகள் சார்பாக கிராமிய வங்கி உத்தியோகத்தர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். நூறு மாணவர்கள் இத்திட்டத்தினால் நன்மையடைந்தனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்





