Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • இலங்கை
  • அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு

Malaikuruvi January 13, 2026
அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு

மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைத்து ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை முன்னைவக்கப்பட்டுள்ளது.

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, யாழ் சித்த மருத்துவ பீடத்தில் கடந்த 47 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய கட்டிடங்கள் மற்றும் விடுதி வசதிகள் விஸ்தரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற வேண்டும். கல்வி அமைச்சு உடனடி மற்றும் நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சித்த மருத்துவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படாத நிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சித்த, ஆயுர்வேத, யூனானி மருத்துவங்களை விரிவாக அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தனர்.

தற்போது நாட்டில் 2011 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியோர் முதலாக 2,045 வேலையற்ற சித்த, யூனானி, ஆயுர்வேத மருத்துவர்களும் 1,187 உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்யாத பட்டதாரிகளும் இருப்பதாக கூறினர்.

அதேவேளை, ஐந்து மருத்துவ பீடங்களில் மொத்தமாக 2,708 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டும் 104 மாணவர்கள் கடந்த ஒரு தசாப்த காலத்தில் பாடநெறியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் தற்போதைய பதவிக்காலம் முடிவடையும் 2029ஆம் ஆண்டுக்குள், வேலைவாய்ப்பற்ற மருத்துவர்கள் எண்ணிக்கை 6,800 ஆகவும், கல்வி பயிலும் மாணவர்கள் 2,800 ஆகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

இதன் அடிப்படையில், மொத்தம் சுமார் 9,600 பேருக்கான தெளிவான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் வலியுறுத்தினர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் 2025 ஒக்டோபர் 9ஆம் திகதி, இது தொடர்பாக ஆரோக்கியமற்ற பதிலை எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகவும், இந்நிலை தொடருமானால் 2013ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி இப்பாடநெறியை தேர்வு செய்தவர்கள் அரச வேலையைப் பெற 2033ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எதிர்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் மற்றும் யோசனைகளை பிரதமரிடம் முன்வைத்ததாகவும், இது தொடர்பாக குழுவொன்றை நியமித்து ஆராயுமாறும் கோரினர்.

ஜனாதிபதி நிதியத்திற்குச் சென்று நாட்டை மீள நிர்மாணிக்க சேகரிக்கப்பட்ட உதவி நிதியை வழங்கியதுடன், நீதி, பாதுகாப்பு, சுற்றுலா, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகள் மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களையும் சந்தித்ததாகவும் தெரிவித்தனர்.

கௌசல்யா

Post navigation

Previous: ஈரானைவிட்டு உடனே வெளியேறுமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
Next: மஸ்கெலியாவில் பிரமிக்கவைக்கும் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு!

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |