அத்துருகிரியா, தனமல்விலை பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
அத்துருகிரியா – கொடகமை வீதிப் பகுதியில் உள்ள உணவகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவர், அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று (08) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இளைஞரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞர் மெதஹின்னை, முங்வத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனமல்விலை பகுதியில் நபர் ஒருவரைக் இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தனமல்விலை, கல்வலயாயா பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
அலுவலக செய்தியாளர் எஸ். ஆர். இரவீந்திரன்
