ஈஈரானிடம் அணுவாயுதம் இருப்பது அமெரிக்காவுக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த கிடைத்தமை சிறந்த வாய்ப்பாகும் என்று தெரிவித்தார். ஈரான் மீதான போருக்குப் பின்னர் முதலாவதாகக் கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரான் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்ததோடு, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கைவிட மறுத்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்
ஈரானின் ஏவுகணைத் திட்டமானது, அவர்களின் அணு ஆயுத மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
இதனை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியபோது, அனைத்து நாடுகளும் தங்களுக்குப் பின்னால் நின்றதாக ட்ரம்ப் கூறினார்.
அணு ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்ட ஒரு ஈரானிய ஆட்சி, மத்திய கிழக்கிற்கும் அமெரிக்க மக்களுக்கும் ஒரு பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்
