பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளந்த சம்பளம் 1750/= ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை அக்கரபத்தனை போட்மோர் தோட்ட மக்கள் நடத்தினர்.
அப்போது தொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் நன்றியைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகளையும் மேற்கொண்டனர். அத்தோடு பற்சோறு சமைத்து பரிமாறித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.



