ஹோர்முஸ் கால்வாய் ஊடான வர்த்தகக் கப்பல் போக்குவரவுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஹோர்முஸ் கடல் மார்க்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை ஈரான் உறுதிப்படுத்தியிருப்பதாக புளும்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, போர் நிறுத்தம் செய்வதாக இருந்தால் ஈரானுக்குப் 15 நிபந்தனைகள் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலைப் பாகிஸ்தான் ஈரானுக்கு எடுத்துச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
