ஹோமாகமை தீ விபத்தில் ராணி தோட்ட யுவதியும் பலியாகியுள்ளார்.
ஹோமாகமை பகுதியில் நேற்றுக் காலை (21) ஹெல்மட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இளையோர் ஐவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இறந்த ஐவருமே இளையவர்கள்; க.பொ.த. பரீட்சையை முடித்துக்கொண்டு குடும்பத்திற்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று சொந்தக் காலில் நிற்கச் சென்றவர்கள்.
மற்றவர்களின் தலையைக் காக்கும் கவசம் தயாரித்தவர்களின் தலையெழுத்து நொடிப்பொழுதில் சின்னாபின்னமாகியது.
ஹோமாகமை தீ விபத்தில் ராணி தோட்டத்தைச் சேர்ந்த வரதராஜா தமயந்தி என்ற யுவதியும் உயிரிழந்துள்ளதாக அவரின் தந்தைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தமயந்தியின் மரணம் பிறவுண்ஸ்விக் தோட்டத்தில் மாத்திரமன்றி முழு மஸகெலியாவிலும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனைய நால்வரின் ஊர்களிலும் அவர்களின் சோகக் கதைதான் பேசுபொருளாக இருக்கும். ஐவரின் ஆத்மா சாந்தியடைவதாக!
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள், கௌசல்யா
