கொழும்பு ஹுணுப்பிட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராமை விகாரையில் 19ஆவது வருடமாக நடைபெறும் ‘புத்த ரஷ்மி’ தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாவது நாள் நிகழ்ச்சிகள் நேற்று [01.05.2026] வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மூன்றாம் நாளுக்கான நகர வெசாக் வெளிச்சக்கூடுகளையும் அலங்காரத் தோரணைகளையும் ‘தன்சலை’ (அன்னதானம்) நிகழ்வுகளையும் ஆரம்பித்து வைத்தார்.




