வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த பொல்பிட்டிகாவல் நிலையம், புதிய, முழுமையான வசதிகளுடன் கூடிய காவல் நிலையமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது-
ஹட்டன் பிரிவில் உள்ள பொல்பிட்டி கிராமத்திற்காக கட்டப்பட்ட புதிய காவல் நிலையம், 06.02.2026 அன்று பொது மக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் தலைமையில், காவல்துறை மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீராராச்சி, நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், பிரியந்த சந்திரசிறி, ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர, அட்டன் பொலிஸ் பிரிவின் அனைத்துப் பொறுப்பதிகாரிகள், பல அரசு அதிகாரிகள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
2021 ஆம் ஆண்டில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீட்டில் குறைந்தபட்ச இடவசதிகள் இருந்தபோதிலும், அந்தப் பகுதியில் 07 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 9,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு விரிவான காவல் சேவையை வழங்கிய பொல்பிட்டி காவல் நிலையம், இனிமேல் அனைத்து வசதிகளுடன் கூடிய காவல் நிலையமாக இயங்கும்.
மஸ்கெலியா நிருபர்







