ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) காலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி கொழும்பு தனியார் பஸ் ஒன்றில் சேவை புரியும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக காணப்படுவதாக தெரிய வருகிறது. இவர் ஹட்டன் வெளிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்ஆ இவர் கடந்த 29 ஆம் திகதி முதல் காணவில்லை என அவர் குடும்பத்தினர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமற்போய் உயிரிழந்தவர் இரண்டு குழந்தைகளின் தந்தை எனத் தெரிவவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர செ. தி. பெருமாள்


