மஸ்கெலியா பகுதியில் இருந்து நோட்டன் விதுலிபுர பகுதிக்குச் சென்ற வான் ஒன்று நோட்டன் சுதர்மா ராமய விகாரை மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வானில் பயணித்த மூவரில் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (16) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இருவரும் வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து நோட்டன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

