தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 24ஆம் திகதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி இந்த மனு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவரது மனைவியின் விவாகரத்துகோரல் அவரது வாக்கு வங்கியில் பின்னடைவை ஏற்படுத்துமென தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
