வருடாந்த அப்பகஸ் பரீட்சை ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
அப்பகஸ் பரீட்சை அட்டன் ஹற்றன் ஹைலண்டஸ் கல்லூரியில் ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (12) நடைபெற்றது.
சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் மலையகம்,ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



பரீட்சை நிறுவனத்தின் அதிகாரி டாக்டர் செந்தில் குமார் பெருமாளின் ஆலோசனைக்கமைய ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்டது.
அப்போது நிறுவனத்தின் உதவி இயக்குனர் ஷியாமளா கண்ணன், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
கௌசல்யா
