2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்த்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய 118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் ஏழாந்திகதி இரண்டாவது வாசிப்பு மீதான உரையை நிகழ்த்தினார்.
கடந்த எட்டாந்திகதி முதல் இரண்டாவது வாசிப்பு மீது விவாதம் நடைபெற்று இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின்போது எண்மர் வாக்களிக்காமல் தவிர்த்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களான மனோ கணேசன, வீ. ராதாகிருஷ்ணன், பீ. திகாம்பரம் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆரரவாக வாக்களித்தனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி கலந்துகொள்ளவில்லை.
பாராளுமன்றம் மீண்டும் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கூடும்.
