இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மூன்றாண்டுகளில் முதற்தடவையாக 331 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று மே 15 விடுத்துள்ள நாணயமாற்று அறிவிப்பில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளது.
வாங்கும் விலை ரூ.323.53, விற்கும் விலை ரூ.331. கடந்த 2023 டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் முதற்தடவையாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
