மோகினி அருவி விபத்தில் காயமடைந்த மாணவியும் இன்று (30) உயிரிழந்தார்.
மஸ்கெலியா நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவி இன்று (30) உயிரிழந்தார்.
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இந்தப் 13 வயது மாணவி கண்டி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
செல்வம் திஷ்னா (13) என்கின்ற இவர், மறே தோட்டத்தைச் சேர்ந்தவரும் மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியின் மாணவியுமாவார்.விபத்தில் இவரது தந்தையான செல்வம், முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இப்போது இந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருக்கிறது.மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாணவர்கள் இருவரில் ஒருவர் வீடு திரும்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
-நல்லதண்ணி நிருபர்
