முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள’ளதாகப் பொலிஸ் ஊடகச் பேச்சாளர்; தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் சபாநாயகர் நேற்று (11) பயணித்த ஜீப் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
