மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக இன்று சென்ற டிப்பர் லொறி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சாரதி பாய்ந்து தப்பித்து விட்டாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த வீதியானது பல தசாப்த காலங்களாக எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கண்டுகொள்ளப்படாத மோசமான குண்டும் குழியும் கொண்ட வீதியாகும்.
500இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் இந்த வீதியையே தினந்தோறும் பாவிக்கின்றனர்.அண்மையில் இந்தப் பாதையினைப் பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி பார்வையிட்டுச் சென்றார்.
சாமிமலை சரத்


