மஸ்கெலியா பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய மாகாண சுற்றுலாத்துறை தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உலக சுற்றுலா தினம் மஸ்கெலியா பிரதேசத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மஸ்கெலியா பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இயற்கை அழகு, அருவிகள், மலைப்பகுதிகள், தோட்டப்புறங்கள்,முக்கியமான சுற்றுலாத் தளங்களை உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 22 முக்கியமான சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. அவற்றை முறையாக அபிவிருத்தி செய்து, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதன் மூலம் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.



சுற்றுலாத்துறை வளர்ச்சியின் மூலம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு அதிக வருமானத்தை உருவாக்கி, அதன் பயனாக தோட்டப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உட்கட்டமைப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திப் பணிகளை மேலும் முன்னெடுக்க முடியும்.
சுற்றுலாத்துறை வளர்ச்சி என்பது மஸ்கெலியா பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான பாதையாகும்.
சுற்றுலா வளரட்டும் – மஸ்கெலியா வளம் பெறட்டும்!
மஸ்கெலியா – இயற்கையின் அழகும், சுற்றுலாவின் எதிர்காலமும்!
